திருமணம் முடிந்த 2 மாதத்தில் கர்ப்பமான மொடல் அழகி: மலேசிய மன்னர் விவாகரத்து செய்ய முடிவு

திருமணம் முடிந்து ஒரு மாதம் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில், மனைவியை விவாகரத்து செய்ய மலேசிய மன்னர் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மலேசிய வரலாற்றில் முதல்முறையாக மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மத், பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் தன்னுடைய பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மருத்துவ விடுப்பில் ரஷ்யாவிற்கு சென்றார்.

அங்கு முன்னாள் மிஸ் மாஸ்கோ அழகி பட்டம் வென்ற கவர்ச்சி மொடல் அழகியான ஒக்சானா வோவோடீனா (25) என்பவரின் அழகில் மயங்கி திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுடைய திருமணம் நவம்பர் 22 ம் தேதி மாஸ்கோ புறநகரான பாரிவ்காவில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகின.

இவர்கள் இருவரும் எப்பொழுது சந்தித்தார்கள் என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், ஏப்ரல் 16ம் தேதியன்று ஒக்சானா, இஸ்லாம் மதத்திற்கு மாறி தன்னுடைய பெயரை ரிஹானா என மாற்றிக்கொண்டதாக மலேசிய செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது.

இந்த தம்பதியினர் இருவரும் தற்போது தங்களுடைய முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாக ரஷ்ய நிறுவனம், இந்த மாத ஆரம்பத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் தம்பதியினர் இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக ரஷ்ய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “ராஜாவை திருமணம் செய்து கொண்ட ரஷ்ய சிண்ட்ரெல்லா பற்றிய விசித்திரக் கதை முடிந்துவிட்டது. தேவையான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது”.

“திருமணம் இரண்டு மாதங்கள் மட்டுமே நீடித்தது.” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை கேள்விப்பட்ட ஒக்சானாவின் தந்தை, இது முட்டாள்தனமான ஒன்று என கடுமையாக பேசியுள்ளார்.