நியூசிலாந்து அணியை சுருட்டிய இந்திய அணி!.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை வென்று உற்சாகத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்நிலையில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் உள்ள மெக்லீன் மைதானத்தில் இன்று தொடங்கியது.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் நியூசிலாந்து அணி தடுமாறி வந்தது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, துவக்க மட்டையாளர்களை அடுத்தடுத்து போல்டாக்கி வீழ்த்தினார். இதன் மூலம் முகமது சமி சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது 100 ஆவது விக்கெட்டை வீழ்த்தினார். மேலும் குறைந்த போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் முகமது ஷமி.

இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால், நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கனே வில்லியம்சன் 64 ரன்களும், ரோஸ் டெய்லர் 24 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால், நியூசிலாந்து அணி 38 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டுகளையும், கேதர் ஜாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.