தமிழ்சினிமாவில் சித்து +2 படத்தின் மூலம் அறிமுகமானவர் சாந்தினி. இவர் அதனை தொடர்ந்து நான் ராஜாவாக போகிறேன், ராஜா ரங்குஸ்கி, வண்டி உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் சாந்தினிக்கு நடன இயக்குனர் நளனுடன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் சாந்தினி மலர்க்கொடி முருகன் தயாரிப்பில், மாணிக் சத்யா இயக்கத்தில் பாண்டியராஜ் மகன் பிரித்விராஜனுக்கு ஜோடியாக காதல் முன்னேற்ற கழகம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, சிவசேனாதிபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் 1985களில் நடக்கும் கதை. இதில் பிரித்விராஜ் வேலைக்கு செல்லாமல் அலைந்து கொண்டிருப்பவர். சாந்தினி டீச்சராக நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் நட்புக்குள் ஏற்படும் துரோகத்தின் விளைவுகளை கூறியுள்ளனர்.மேலும் இந்த திரைப்படத்தை பார்த்த பாண்டியராஜன் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். மேலும் 15 நிமிட கிளைமாக்ஸ் காட்சிகள் நெருப்பு மாதிரி உள்ளது எனவும் கூறியுள்ளார்.