புதிய தொலைபேசி இலக்க சேவையை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி மைத்திரி…!!

புதிய தொலைபேசி இலக்கமொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உத்தியோகபூர்வமாக நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளார்.

போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பில் அறிவிக்கக்கூடிய வகையிலான 1984 என்ற இலக்கமே இவ்வாறு அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தேசிய போதைப் பொருள் தடுப்பு வாரம் இன்று முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த தேசிய போதைப் பொருள் தடுப்பு வாரத்திற்கான ஆரம்ப நிகழ்வு இன்று முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் நடைபெற்றிருந்தது.இதில் கலந்து கொள்வதற்காக முல்லைத்தீவிற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி, பாடசாலையில் வைத்து இந்த உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.