தமிழகத்தில் அம்மா அணி…., யாழில் அண்ணா அணி தெரியுமா?

தமிழகத்தில் அம்மா உணவகம், அம்மா முன்னேற்ற கழகம் என பல உள்ளன. தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அப்படியொரு விசுவாசப்படையை உருவாக்கியிருந்தார். கேள்விக்கிடமின்றிய பக்தி. அவர்கள் தலைவர்களாக அல்லாமல், தொண்டர்களாகவும்- வெறியர்களாகவுமே இருப்பார்கள், இருக்கிறார்கள்.

அதனால்தான் ஜெயலலிதா மறைந்ததன் பின்னர் கட்சி அப்படி அல்லாடுகிறது.

தமிழகத்தில் இருந்து எல்லாம் இறக்குமதியாகிறது. சினிமா, சினிமா நடிகனை கொண்டாடுவது, பாலாபிஷேகம் செய்வது, சீரியல், உடை என எல்லாமும் இறக்குமதியாகும்போது, இந்த அரசியல் பாரம்பரியமும் இறக்குமதியாகாதா?

இறக்குமதியாகிவிட்டது போலத்தான் தெரிகிறது.

சுதந்திரக்கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட தேசியப்பட்டியல் எம்.பி அங்கஜன் இராமநாதன், ஒரு இளைஞர் அணியை வைத்திருக்கிறார். அவர்கள் தொண்டர்கள் என்றுதான் இதுவரை தெரிந்தார்கள். ஆனால், தமிழகத்தில் ஜெயலலிதா உருவாக்கி “வெறியர்களை“ போல இருப்பார்களோ என்று சிந்திக்க தோன்றுகிறது.

அதற்கு முக்கிய காரணம், தமது அணிக்கு வைத்துள்ள பெயர்!

அங்கஜன் அணியென ஒரு அணியாக செயற்படுகிறார்கள். போதாதற்கு இப்போது, இளைஞர் அணிக்கு, “அண்ணா அணி“ என்று பெயராம்!

இளைஞர்கள் வெறியர்களாகமல், நாளைய தலைவர்களானால் சரி.

இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு விடயமும் உள்ளது.

மருதனார் மடத்தில் அமைந்துள்ள இராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட, மூலிகை தோட்டம் செய்கை பண்ணப்பட உள்ளது. இதற்காக பாடசாலை வளாகத்தை “அண்ணா அணி“ துப்பரவு செய்ததாம்!