கடைக்கு சென்றவுடன் ஆம்லேட் வாங்கி உண்பவர்கள்., வீட்டில் இதனை செய்து பாருங்கள்…!!

முட்டை என்று கூறினால் விரும்பாத நபர்களே இல்லை., கடைக்கு சென்றவுடன் எந்த பொருட்கள் சாப்பிட்டாலும் அந்த ஆம்லெட்டை ஆர்டர் செய்து சாப்பிடாமல் வரும் பழக்கம் அனைவருக்கும் உண்டு. அந்த வகையில் மிளகு முட்டை வறுவல் செய்யும் முறையை காண்போம்.

தேவையான பொருட்கள்:

முட்டை – 4.,

மிளகு தூள் – சிறிதளவு அல்லது காரத்திற்கேற்ப.,

வெங்காயம் – 2 எண்ணம்.,

பச்சைமிளகாய் – 2 (காரத்திற்கேற்ப).,

உப்பு – தேவையான அளவு.,

மிளகாய் தூள் – தேவையான அளவு.

மிளகு முட்டை வறுவல் செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட முட்டையை அவித்துக்கொண்டு அதனை சரியான அளவு இருக்கும் படி பாதியாக நறுக்க வேண்டும்.

பின்னர் எடுத்துக்கொண்ட வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சிறிது சிறிதாக நறுக்க வேண்டும்.

முதலில் வானெலியில் எண்ணையை ஊற்றி எண்ணெய் சூடானவுடன் சிறிது மஞ்சள் தூளை போட்டு நறுக்கி வாய்த்த முட்டையை பொறித்தெடுக்க வேண்டும்

பின்னர் அதே வானெலியில் சிறிது கடுகு உளுந்து போட்டு தாளித்து., அதனுடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்.

நன்றாக வெங்காயம் வதங்கியவுடன் அதில் தேவையான அளவிற்கு மிளகு தூள் மற்றும் சிறிதளவு மிளகாய் தூளை போட்டு வறுத்தெடுக்கவும். இப்போது சுவையான மிளகு முட்டை வறுவல் தயார்.