தமிழனுக்கு நேர்ந்த கொடூரம்.! கொந்தளிக்கும் தமிழக முதல்வர்.!!

தைத்திருநாள் தமிழர்களின் வாழ்வில் நலமும், வளமும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீனவர்கள் வாழ்வில் இருளும், துயரமும் சூழ்ந்திருக்கிறது. வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் தாக்குவதும், சிறை பிடிப்பதும் வாடிக்கையாகி விட்ட நிலையில், இரு ஆண்டு இடைவெளியில், மேலும் ஒரு தமிழக மீனவர் சிங்களப்படையினரால் தாக்கி கடலில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டு உள்ளார்.

கடந்த சனிக்கிழமை சிங்களப்படை இந்தியாவின் தமிழக மாநிலத்தை சேர்ந்த இராமேஸ்வரம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 28 மீனவர்களை சிங்களப்படை கைது செய்தது. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 9 பேர் மீது தாக்குதல் நடத்திய சிங்களப் படைகள், அவர்களின் இரு படகுகள் மீது தங்களின் படகுகளைக் கொண்டு மோதின. அத்தாக்குதலில் இரு படகுகளும் தகர்ந்து கடலில் மூழ்கின. அப்படகுகளில் இருந்த மீனவர்கள் 9 பேரும் கடலில் விழுந்து தத்தளித்த நிலையில், அவர்களில் 8 பேரை மட்டும் சிங்களப்படை மீட்டு கைது செய்தது.

இதில், சித்தர்காடு கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி என்ற மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக நெடுந்தீவு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அந்த உடல் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை கடற்படையினர் விரட்டியபோது கடலில் மூழ்கி மீனவர் முனியசாமி உயிரிழப்புக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இரங்கல் தெரிவித்து, மீனவர் முனியசாமி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி அளிப்பதாகவும் தமிழக முதலமைச்சர் அறிவிப்பு வெளிட்டுள்ளார். மேலும், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினருக்கு முதலமைச்சர் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.