திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகர் விஷால்…

நடிகர் விஷாலுக்கும், தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டிக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது.

இருவரும் அதிகாரபூர்வமாகவே டுவிட்டரிலும், இன்ஸ்டாகிராமிலும் தங்களது திருமணத்தை அறிவித்துவிட்டனர்.

`மகிழ்ச்சி.. பெருமகிழ்ச்சி.. அவங்க எனக்கு ஓகே சொல்லிட்டாங்க.. என் வாழ்வின் மிகப்பெரிய அத்தியாயம் தொடங்கவிருக்கிறது.

திருமணத் தேதியை சீக்கிரமே அறிவிப்பேன் என்று விஷால் மகிழ்ச்சி பொங்க ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அர்ஜீன் ரெட்டி என்ற திரைப்படத்தில் சில காட்சிகளில் அனிஷா நடித்துள்ளார்.