மது மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த வைரமுத்து.! அதிர்ச்சியில் இபிஎஸ்-ஓபிஎஸ்.!!

தமிழக அரசுக்கு முக்கிய வருவாய் தரக்கூடியவைகளில், தமிழக அரசால் நடத்தப்படும் மதுபான கடைகள் பெரும் பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தாலும், தற்போதைய சூழ்நிலையில், மதுக்கடைகளை திறக்க கூறி பெரிய அளவில் குடிமகன்கள் போராட்டம் நடத்தும் அளவிற்கு மது விற்பனை என்பது கொடிகட்டி பறக்கிறது.

இந்நிலையில், திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து அவர்கள், தமிழகத்தில் நடக்கும் குற்றங்களுக்கு மதுதான் காரணம் என்று தெரிவித்துள்ளார். சென்னை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, மதுவுக்கு எதிராக முதலில் குரல் கொடுத்தது திருவள்ளுவர் தான். இன்று தம்,இலக்கத்தில் நடக்கும் குற்ற சம்பவங்களுக்கு இந்த மதுவே காரணம். கிராமங்களில் அதிகமாக இருந்த முதியவர்களின் எண்ணிக்கை குறையவும் இந்த மதுவே காரணம் என்று தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசின் வருமானத்திற்காக 20 சதவீதம் மக்கள் மதுபோதையில் மயங்கி கிடக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பிய வைரமுத்து அவர்கள், தற்போது ஆட்சியில் உள்ள அரசும், இனி ஆட்சிக்கும் வரும் அரசும் மதுவை ஒழிக்க கொள்ளை முடிவு எடுத்தால் தமிழர்கள் கொண்டாடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், மது குடிப்பதை திரைப்படங்களில் ஹீரோயிசம் போன்று கட்சி வைத்து. தமிழக அரசுக்கு மேலும் வருவாய் ஈட்டி தரும் திரைத்துறையும் இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். மது குடிப்பவனை கடும் குற்றம் செய்தவன் போல் கட்சி அமைக்க வேண்டும். மது இந்த நாட்டுக்கு கேடு என்று கூற வேண்டிய ஊடகங்களே, மதுவுக்கு இலவச விளம்பரம் தான் செய்கின்றனர். இங்கு மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டுமானால், மது வாங்கி கொடுக்க வேண்டிய சூழ்நிலையில்தான் தமிழகம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு கடுமையான முறையில் மதுவிலக்கை கொண்டுவந்தால் மட்டுமே சாத்தியம் ஆகும்.