71 வயது மூதாட்டியை காதலித்து திருமணம் செய்த 17 வயது இளைஞன்!

அமெரிக்காவில் 17 வயது இளைஞரை திருமணம் செய்த 71 வயது பெண் தங்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவின் Tennessee பகுதியின் Maryville பகுதியைச் சேர்ந்தவர் Almeda Errell.

தற்போது 74 வயதான இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு 17 வயது இருக்கும் Gary Hardwick(தற்போது 21 வயது) என்ற இளைஞரை திருமணம் செய்து கொண்டார்.

54 வயது குறைவான நபரை திருமணம் செய்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், Almeda Errell-விடம் பிரபல தனியார் யூடியூப் நிறுவனம் ஒன்று பேட்டி எடுத்துள்ளது.

அதில், Almeda Errell எங்களின் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கிறது. மனதளவில் மட்டுமின்றி உடல் அளவிலும் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

இந்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து வருகிறோம். ஒவ்வொரு இரவும் டேட்டிங்கும் செல்கிறோ. நிறைய ரோமான்ஸ் எங்களுக்குள் நடக்கிறது என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

Almeda Errell-க்கு நான்கு குழந்தைகள் இருக்கிறது. இவர் 43 ஆண்டுகளுக்கு டோனால்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்.

அதன் பின் இவருடைய இளையமகன் Robert என்பவ் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

அப்போது இவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக, இவருடைய பேரனின் நண்பர் Gary Hardwick வந்துள்ளார்.

அப்போது தான் இருவரும் சந்தித்துக் கொண்டனர். Almeda Errell-ஐ பார்த்தவுடனே Robert -க்கு பிடித்துபோய்விட்டது.

ஆனால் அப்போது இருவரும் அந்தளவிற்கு பேசிக் கொள்ளவில்லை. அதன் பின் குடும்பத்தினரின் பிறந்தநாள் விழாவில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

அப்போது தான் Gary Hardwick தன்னுடைய விருப்பத்தைக் கூறியுள்ளார். ஆனால் Almeda Errellஎன்னுடைய வயது என்ன? உன்னுடைய வயது என்ன? என்று கூறியுள்ளார்.

ஆனால் Gary அது வெறும் எண் தான், உங்களை பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளார். அதன் பின் இரண்டு வாரங்களில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் இவர்களிடம் திருமணத்தை Almeda Errell குடும்பத்தினர் சிலர் அனுமதிக்கவில்லை. இருப்பினும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஒரு சிலர் Gary Hardwick அவரிடம் இருக்கும் பணத்திற்காகவே இப்படி திருமணம் செய்து கொண்டார் என்று கூறிவருகின்றனர். அவரோ பேசுபவர்கள் பேசட்டும் நாங்கள் வாழ்ந்து காட்டுகிறோம் என்று கூறியுள்ளார்.

திருமண் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டத நிலையில் Almeda Errell-க்கு 74 வயதும், Gary Hardwick-க்கு 21 வயதும் ஆகிறது. அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலத்திலும் வயதிற்கேற்ப திருமண வயது மாறுபடும் என்பது குறிபிடத்தக்கது.