மிக பெரிய கோடீஸ்வரரான ரத்தன் டாடா ஏன் திருமணமே செய்து கொள்ளவில்லை தெரியுமா?

இந்தியாவின் மிகப் பெரிய தொழில்நிறுவனமான டாடாவை பல ஆண்டுகளாகக் கட்டி ஆண்டவர் ரத்தன் நெவல் டாடா.

இவர் தலைவராக இருந்த காலத்தில் தான் டாடா நிறுவனம் பல ஏற்றங்களைக் கண்டது. தற்போது இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கும் மேல்.

1937-ம் ஆண்டு பிறந்த ரத்தன் டாடாவின் இளமைக் காலம் சோகம் நிறைந்தது. 1940-ம் ஆண்டு ரத்தனின் தந்தை நெவல் ஹோம் சூஜி தாயார் சூனாவை விவாகரத்து செய்தார். இதனால் ரத்தன் பாட்டியிடம் வளர்ந்தார்.

பிசினஸில் கொடிகட்டிப் பறந்த ரத்தன் நெவல் டாடாவின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சியான ஒன்றாக அமையவில்லை.

காதலித்த 4 பெண்களையுமே வெவ்வேறு காரணங்களால் அவரால் கரம் பிடிக்க முடியாமல் போனது.

இந்தியா- சீனா போரும் ரத்தன் திருமணம் நடக்காததற்கு ஒரு காரணமாக இருந்துள்ளது. அமெரிக்காவில் படித்த ரத்தன் அங்கேயே ஐ.பி.எம் நிறுவனத்தில் சில காலம் பணிபுரிந்தார். அப்போது, அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவரை விரும்பியுள்ளார். 1962-ம் ஆண்டு அவரை வளர்த்த பாட்டியின் உடல் நிலை மோசமானதால் ரத்தன் இந்தியா திரும்பினார்.

தன்னைத் தொடர்ந்து அந்தப் பெண்ணையும் இந்தியாவுக்கு வருமாறு ரத்தன் அழைத்தார். இந்தச் சமயத்தில் இந்தியா மீது சீனா போர் தொடுத்தது. அமெரிக்க ஊடகங்கள் பெரும் போராகச் சித்திரித்து செய்திகள் வெளியிட்டு வந்தன. இதனால், பயந்துபோன அமெரிக்கப் பெண், ரத்தனை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

அமெரிக்காவில் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். ரத்தன் முதல் காதல் இப்படித்தான் தோல்வியில் முடிந்தது.

திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? என்ற கேள்விக்கு, நான்கு முறை திருமணம் கைகூடியதாகவும், ஏதோ ஒரு காரணமாக திருமணம் தடைப்பட்டதாகவும், நான்கு முறை காதலில் விழுந்ததாகவும் சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ரத்தன் டாடா குறிப்பிட்டுள்ளார்.