திருத்துறைப்பூண்டியில் திருமணம் செய்து வைக்காத தந்தையை வெட்டிக்கொன்ற மகனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
முருகப்பாவுக்கு திருமண வயது வந்தும் தந்தை கணேசன் திருமண ஏற்பாடுகள் செய்யவில்லை. திருமண ஏற்பாடு செய்வது தொடர்பாக தந்தைக்கும் – மகனுக்கும் தகராறு இருந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கணேசனை கோடாரியால் முருகப்பா வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
தொடர்ந்து மகன் முருகப்பாவை கைது செய்த பொலிசார் இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.







