சாவகச்சேரி நகரில் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள ஸ்டார் ஹோட்டல் என்ற வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது.
இக்கொள்ளைச் சம்பவம் இன்று (9) அதிகாலை 2 மணிக்கும் 3 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.
குறிப்பிட்ட வர்த்தக நிலையத்தின் மேற்கூரையை பிரித்து சிசிரிவி கமரா இணைப்புக்களை துண்டித்து விட்டு உள்நுழைந்த கொள்ளையர்கள்
அங்கிருந்த பணம் மற்றும் தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகளையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
இதன்போது சுமார் ஏழு லட்சம் ரூபா பணம், மூன்று லட்சம் ரூபா பெறுமதியான தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் என சுமார் பத்து லட்சம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
இக்கொள்ளை இடம்பெற்ற போது வர்த்தக நிலையத்தின் பணியாளர்கள் கடையின் பின்புறம் உறக்கத்தில் இருந்துள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸாரோடு இணைந்து சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






