செய்தித்தாள்களை பயன்படுத்த முற்றிலும் தடை!

இந்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணையம் நடத்திய ஆய்வுகளில், உணவு பொருட்கள் பேக்கிங் செய்யப்படும் பொருட்களில் உள்ள வேதி பொருட்கள் உணவுகளில் அதிகளவில் கலப்பதாகவும், அவற்றின் மூலம் பலவிதமான நோய்கள் ஏற்படுவதாகவும் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து பாதுகாப்பு தர கட்டுப்பாட்டு ஆணையம், தரமான உணவுமுறையை அதிகரிக்க புதிய வழிமுறைகளை கொண்டு வர முடிவுசெய்தது.

அதனடிப்படையில் செய்திதாள்கள், காகித தாள்கள், மறுசுழற்சி செய்யத்தக்க பிளாஸ்டிகளில் உணவு பொருட்களை பேக்கிங் செய்து விற்பனை செய்யகூடாது என உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் உணவு வர்த்தக நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணைய சிஇஓ பவன் அகர்வால் கூறுகையில், உணவு உற்பத்தியாளர்கள் புதிய பேக்கிங் வழிமுறைகளை பின்பற்ற 2019 ம் ஆண்டு ஜூலை 1 வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருள் பேக்கிங் விதிமுறைகளை கடைபிடிக்காத மற்றும் கேரி பைகள், மறுசுழற்சி செய்யும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களில் உணவு பொருட்களை பேக்கிங் செய்து விற்பனை செய்தாலோ அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.