11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி இறுதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும் என செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது; மத்திய அரசின் முடிவிற்கு பின் இது குறித்து அறிவிக்கப்படும்.
நிலுவையிலுள்ள 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாத இறுதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும்.
கல்வியாளா்களின் கருத்துக்களை மாணவா்களிடம் எடுத்துச்செல்ல பள்ளி கல்வி துறை சார்பில் புதிய தொலைக்காட்சி தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.






