சென்னை துரைப்பாக்கம் பகுதியில் செயலட்டு வரும் மகளிர் விடுதியில் காவலாளியாக வேலை பார்த்து வருபவர் காமராஜ். 45 வயது நிறைந்த இவர் i தூங்கிக்கொண்டிருந்தபோது, மர்மநபர் ஒருவர் அவரது அறைக்குள் புகுந்து செல்போனை திருடிச்சென்றுள்ளார்.
இந்நிலையில் செல்போன் காணமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த காமராஜ், வேறு ஒருவரிடம் செல்போனை வாங்கி தனது செல்போன் எண்ணிற்கு போன் செய்துள்ளார்.
போனை எடுத்து பேசிய அந்த மர்மநபர், உனது செல்போனை நான்தான் திருடி வந்தேன்.திருவான்மியூர் பஸ் நிலையம் அருகே வந்து 5 ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு செல்போனை வாங்கிக்கொள் என்று கூறியுள்ளார்.
இது குறித்து காமராஜ் புகார் போலீசாரிடம் செய்தார். பின்னர் திருவான்மியூர் பஸ் நிலையம் சென்ற அவர் அங்கு வந்த திருடனிடம் 5 ரூபாயை கொடுத்துவிட்டு செல்போனை வாங்கியுள்ளார்.
பின்னர் அங்கு மறைந்திருந்த போலீசார், அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர், திருச்சி துவரக்குறிச்சியை சேர்ந்த அப்துல் ஹமீம் என தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






