அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் அடம் பிடிக்கும் மகளை தந்தை ஒருவர் விமான நிலையத்தில் தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் பார்வையாளர்களை வாயடைக்க வைத்துள்ளது.
குறித்த சம்பவம் டல்லெஸ் சர்வதேச விமான நிலையத்தில் புத்தாண்டு தினத்தன்று நடந்துள்ளது.
சம்பவத்தன்று தமது காதலியை அழைத்து வருவதற்காக இளைஞர் ஒருவர் டல்லெஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது விமான பயணி ஒருவர் தமது மகளை அவரது உடையின் ஒரு விளிம்பில் பிடித்து தரதரவென இழுத்துச் சென்றுள்ளதை இவர் கண்டுள்ளார்.
முதலில் அவர் இழுத்துச் செல்வது பை போன்ற ஏதேனும் ஒன்றாக இருக்கலாம் என கருதிய இவருக்கு, அருகில் சென்று பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்துள்ளது.
உடனே தமது மொபைலில் அந்த காட்சிகளை படம் எடுத்துள்ளார். மட்டுமின்றி குறித்த சிறுமியின் சகோதரி ஒருவர் தமது தந்தைக்கு 200 அடி பின்னால் நடந்து சென்று கொண்டிருந்ததாக குறிப்பிடும் அந்த இளைஞர்,
இந்த சங்கடமான சூழலில் இருந்து தப்பிக்கவே அவர் மிகுந்த எச்சரிக்கையுடன் தள்ளியே நடந்து சென்றுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
தரதரவென தம்மை இழுத்து சென்றாலும், அந்த சிறுமி எதிர்ப்பெதுவும் காட்டாமல் இருந்துள்ளார். இச்சம்பவத்தை பார்த்த மக்கள் வாயடைத்து நின்றுள்ளனர்.
ஆனால் எவரும் ஏன் எதற்கு என்று அந்த தந்தையிடம் கேள்வி எழுப்பவில்லை என அந்த இளைஞர் தமது குறிப்பில் பதிவிட்டுள்ளார்.