நோர்வே ஓசிலோ மாநகரின் பிரதி மேயர் பதவி வகிக்கும் ஹம்சாயினி, யாழ் சென்று டக்ளஸ் நடத்தும் TV இல், புலிகள் காலத்தில் ஜனநாயகம் இருக்கவில்லை என்று கூறி சிங்களவர் பாராட்டை பெற்றுள்ளார். யார் இந்த ஹம்சாயினி ? 27 மார்ச் மாதம் 1988ம் ஆண்டு யாழில் பிறந்த இவர் 3 வயதில் நோர்வே சென்றுவிட்டார். பின்னர் அவர் அங்கே இருந்து பருவம் அடைந்தவேளை, நோர்வே நாட்டில் இயங்கிய தமிழ் இளையோர் அமைப்பில் இணைக்கப்பட்டார். தமிழ் இளையோர் அமைப்பு என்பது தமிழ் தேசியத்திற்காகவும், விடுதலைக்காகவும் பாடு படும் இளைஞர் அமைப்பு. அதனூடாக தமிழர்களின் ஆதரவைப் பெற்ற இவர். மிக வேகமாக சென்று அரசியல் கட்சியில் இணைந்தார்.
பின்னர் இவர் பிரதி மேயர் பதவிக்கு போட்டியிட்டவேளை. ஓசிலோ நகரில் உள்ள பல நூறு தமிழர்கள் இவருக்கு ஆதரவாக வாக்குப் போட்டார்கள். ஏன் என்றால் இவர் தமிழ் இளையோர் அமைப்பில் இருந்த காரணத்தால். இவர்களை போனற இளையோர்கள் அரசியலுக்கு வரவேண்டும். இதனூடாக தமிழர்களுக்கு ஒரு விடிவு வரவேண்டும் என்பதே வாக்குகள் போட்ட தமிழர்களின் கனவாக இருந்தது. ஆனால் தமிழர்களின் வாக்குகளை பெற்ற இவர் பின்னர் தமிழர்களை ஒதுக்கிவிட்டு, பிரதி மேயராக வலம் வந்தார். தான் இலங்கை செல்லவுள்ள விடையத்தை நண்பர்கள் ஊடாக, லங்கா ஸ்ரீ, தமிழ் வின், ஐ.பி.சி தமிழ் என்று அனைத்து, ஊடகங்களுக்கும் செய்திகளை கசியவிட்டு(எதனை கொடுத்தால் இவர்கள் செய்தி எழுதுவார்கள் என்பது எங்களுக்கு தெரிந்த விடையம் தானே) அதனை கொடுத்து செய்திகளை போடச் செய்துள்ளார்.
பின்னர் யாழ் சென்று விடுதலைப் புலிகள் காலத்தில், ஜனநாயகம் இல்லை. புலிகள் பெண்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்லவில்லை என்று பேட்டி கொடுத்துள்ளார். இவர் கூறுவது படு பொய்யான விடையம். சு.ப தமிழ்ச் செல்வன் மற்றும் நடேசன் ஆகியோர் நோர்வே நாட்டுக்குச் சென்றவேளை சமாதான செயலகத்தில் பணியாற்றிய பெண்களை அழைத்துச் சென்றுள்ளார்கள். இவர்களில் பலர் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டுள்ளார்கள். இந்த புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி இருந்ததை நாம் நினைவு படுத்த தேவைஇல்லை.
யாராவது அரசியலுக்கு வந்து எம் தமிழர்களுக்கு ஒரு விடிவை, விடுதலையை அல்லது ஒரு நிம்மதியான வாழ்க்கையை பெற்றுத்தரமாட்டார்களா என்று பல நாடுகளில் உள்ள அப்பாவி தமிழர்கள், இவர்கள் போனற அரசியலில் நிற்க்கும் நபர்களுக்கு வாக்குகளை போடுவதும், ஆதரவு தெரிவித்தும் வருகிறார்கள். ஆனால் ஹம்சாயினி போன்றவர்கள் அதனை மறந்து பதவி மோகத்தில் சிங்கள கைக்கூலிகளுக்கு அடி பணிந்து செயல்பட்டு வருகிறார்கள் என்பது வெட்கக்கேடான செயல் ஆகும். இனியாவது இவரை நாம் புறக்கணிப்போம். உண்மையாக உழைக்க உள்ள நபர்களை இனம் காணுவோம். இவர் யாழில் கொடுத்துள்ள பேட்டியானது ஒட்டு மொத்த தமிழர்களையும் இழிவு படுத்தும் செயலாக அமைந்துள்ளது என்கிறார்கள் இதனை நேரில் பார்த்த பலர்.