சிவப்பு நிற உடை அணிந்த 11 பெண்களை கொன்ற நபர்: வெளியான காரணம்

சீனாவில் 11 பெண்களை பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்த 54 வயது நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதல் கொலைக்கு பின்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னரே குறித்த நபருக்கு நீதிமன்றம் தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

சீனாவில் Jack the Ripper என்ற பெயரிலேயே இந்த கொடூர குற்றவாளியான 54 வயது Gao Chengyong அறியப்பட்டு வந்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் காவோவை தூக்கிலிட சீனாவின் முக்கிய குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பில் அங்குள்ள உச்ச நீதிமன்றமும் அனுமதி வழங்கியதும் தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.

1988 ஆம் ஆண்டு முதன் முறையாக காவோ ஒரு யுவதியை பலாத்காரம் செய்து கொலைப்படுத்தியுள்ளார். பின்னர் 2002 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் சிறுமிகளும் யுவதிகளும் உள்ளிட்ட 10 பேர் காவோவின் கொடூரத்திற்கு இரையாகியுள்ளனர்.

கொல்லப்பட்ட அனைவரும் கழுத்து அறுக்கப்பட்டு உடல் பாகங்கள் சிதைக்கப்பட்ட நிலையிலும், அந்தரங்க உறுப்புகள் வெட்டப்பட்ட நிலையிலும் புதைக்கப்பட்டுள்ளனர்.

ஜான்ஸு மற்றும் மங்கோலியா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள யுவதிகளை மட்டுமே திட்டமிட்டு தாக்கியுள்ளார்.

சிவப்பு ஆடை அணிந்து செல்லும் பெண்களை நோட்டமிட்டு, அவர்களின் குடியிருப்புகளுக்கு சென்று பலாத்காரம் செய்து கழுத்தை அறுத்து கொலை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் காவோ.

சடலத்தை பல துண்டுகளாக வெட்டி அடையாளம் தெரியாதவாறு சிதைத்து அப்புறப்படுத்தியுள்ளார். காவோவின் பிடியில் சிக்கிய 8 வயது சிறுமியையும் பலாத்காரம் செய்து கொன்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெண்கள் மீதான வெறுப்பும் அதீத பாலியல் இச்சையுமே இந்த தொடர் கொலைகளுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

5 ஆண்டுகள் நீண்ட தொடர் விசாரணை மற்றும் தேடுதல் வேட்டைக்கு பின்னரே சீன பொலிசார் காவோவை கைது செய்தனர்.

மரண தண்டனைக்கு நீதிமன்றம் விதித்தாலும், அது எந்த வகை என நீதிமன்றம் வெளிப்படுத்த மறுத்துள்ளது.

பொதுவாக சீனாவை பொறுத்தமட்டில் விஷம் செலுத்தி குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவார்கள்,

அல்லது சிறப்பு அதிகாரிகளால் துப்பாக்கி குண்டுக்கு இரையாக்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.