15 வயது மகளுக்கு நேர்ந்த துயரம்… விசித்திரமாக பழி தீர்த்த தந்தை!

இத்தாலியில் சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்து சிறையில் இருந்து விடுதலையான நபர் மர்மமான முறையில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதில் மனமுடைந்த அவரது தந்தை வாடகை கொலையாளியை ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இத்தாலியின் Frasso Telesino நகரத்தில் வைத்து 45 வயதான Giuseppe Matarazzo என்பவர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பில் வெள்ளியன்று Generoso Nastam(30) மற்றும் Giuseppe Massaro(55) ஆகிய இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

வாடகை கொலையாளிகளால் கொல்லப்பட்ட Matarazzo 15 வயது இளம்பெண்ணை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததற்காக பதினொன்றரை ஆண்டுகள் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்துகொள்ள, இதில் மனமுடைந்த தந்தை, குற்றம் சாட்டப்பட்ட நபர் சிறையில் இருந்து விடுதலையான நிலையில் வாடகை கொலையாளிகளை பயன்படுத்தி கொலை செய்துள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் தந்தையிடம் விசாரணை நடைபெறுவதாக கூறப்பட்டாலும், இதுவரையில் அவர் கைது செய்யப்படவில்லை.

தற்போது கைதான இருவரும் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.