ஆறாவது முறை காதல் திருமணம்.! 6-ம் மனைவி நிறை மாத கர்ப்பிணி – கணவன் செய்த கோர சம்பவம்.!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தென்னம்பட்டியை சார்ந்தவர் முருகன். இவர் அங்குள்ள பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள காளியமந்தை பகுதியை சார்ந்தவர் ராதா.

இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் காதலாக மாறவே., இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

தங்களின் காதல் விபரத்தை ராதா அவருடைய இல்லத்தில் தெரிவிக்கவே., இருவருடைய காதலுக்கு இராதாவின் பெற்றோர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்நிலையியல்., இருவரும் கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு வயதுடைய மகன் இருக்கும் நிலையில்., தற்போது மீண்டும் நிறைமாத கர்ப்பிணியாக ராதா உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்துவந்துள்ளது.

மேலும்., தற்போது உள்ள நிலையில் அதிகளவு கடனாலும் தவித்து வந்த நிலையில்., கடன் பிரச்சினைக்கு பணம் பெற்று வருவதாக முருகன் கூறி இல்லத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

இல்லத்தை விட்டு வெளியேறிய இவர் குறித்த எந்த விதமான தகவலும் இல்லாததால்., சந்தேகமடைந்த ராதா அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவருக்கு முன்னதாகவே 5 திருமணங்கள் நடைபெற்றது தெரியவந்தது.

மேலும்., இவர்கள் இருவரும் தங்கியிருந்த மளிகை கடையையும் முருகன் வீட்டார் அபகரித்ததால்., தங்க இடமில்லாமல் கை குழந்தையுடனும்., கருவுற்ற நிலையில் கோவில் மண்டபங்களில் தங்கி வருகிறார்.

பிரசவத்திற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில்., இவர்வசம் இருந்து ஆவணங்களை முருகன் திருடி சென்றதால் செய்வதறியாது காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.