‘என் சாதிக்கு மட்டும் தான் எல்லாம் செய்வேன்’ சர்ச்சையை கிளப்பிய அமைச்சர்!

கடந்த டிசம்பரில் ராஜஸ்தானில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதில் முதலமைச்சராக, அசோக் கெலாட் பொறுப்பேற்று கொண்டார். அவரது மந்திரி சபையில், மம்தா பூபேஷ் என்பவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சராக பணியேற்றார்.

இவர் மட்டும் தான் அமைச்சரவையில் உள்ள ஒரு பெண் அமைச்சர். மேலும், மம்தா பூபேஷ் ஒரு பழங்குடியினத்தை சேர்ந்தவர். ஆல்வார் மாவட்டம் ரெனியில் அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அதில் அவர், ‘ என் இனதாய் சேர்ந்த மக்களுக்கு பணி செய்வதே எனது முதல் கதையாகும். அவர்களின் முன்னேற்றத்திற்கு என வேண்டுமோ, அதற்கு முக்கியவத்துவம் கொடுப்பேன். எனது சாதியில் உள்ள ஒவ்வொருவரும் முன்னேற பாடுபடுவேன். இது தான் எனது நோக்கம். மற்ற சாதிக்கு இணையாக எனது மக்களை கொண்டு வருவேன்.’ என பேசியுள்ளார்.

இவ்வாறு பேசிய மம்தா பூபேஷ் அவர்களின் பேச்சிற்கு, பாஜக,’ சில நாட்களுக்கு முன்பு அனைவருக்கும் நன்மை செய்வேன், அனைவரும் சமம், என பேசி பதவியேற்ற மம்தா இன்று தான் சார்ந்த சமூகத்திற்காக பாடுபடுவேன் என கூறுவது நியாயமா? மக்களிடம் சாதி பாகுபாட்டை உருவாக்கி ஆட்சி செய்வதே காங்கிரசின் நிலைப்பாடு’ என கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், மம்தா நான் அவ்வாறு பேசவில்லை என மறுத்துள்ளார்.