“தேர்தலுக்காக ராமதாஸை ஹிட்லர் ஆக்குகிறாரா திருமா?” என்கிற ஒரு நிகழ்ச்சியை, வாரத்தின் மொத்த நாட்கள் எண்ணிக்கையில் பெயர் வரும் ஒரு தொலைக்காட்சியில் நடத்தியிருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியின் நெறியாளராக முன்னிலை வகித்தவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஐடி விங் ஆலோசகர். இதில் கலந்துகொண்டு பேசியவர் அதே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆளூர் ஷாநவாஸ்.
அதாவது, விசிக ஐடி விங் நிகழ்ச்சியில் அவர்களுக்கு பயிற்சியளிக்கும் குறிப்பிட்ட தொலைக்காட்சியின் நெறியாளரே அதே விசிக பிரமுகரை வைத்து அந்த பிரபல தொலைக்காட்சியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக இனவெறுப்பு நிகழ்ச்சியை தொகுத்து அளிக்கிறார்.
இது என்ன விதமான பத்திரிகை தர்மம்?
ஹிட்லர் ஒரு படுமோசமான இன அழிப்பு குற்றவாளி. 30 லட்சம் யூதர்களையும், சிறுபான்மையினரையும் கொன்றொழித்த கொடூரன். அந்த கொடுங்கோலன் படத்தை, 108 சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கிடைக்க காரணமாக இருந்த இராமதாசு அவர்களுடன் ஒப்பிட்டு குறித்த பிரபல தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது எப்படி?
தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சமூகங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக வெறுப்பு அரசியலை நடத்திவரும் விசிக இனவெறி கட்சியா? அல்லது எல்லா சமூகங்களுக்குமான பன்முக அரசியலை முன்வைக்கும் பாமக இனவெறி கட்சியா?
குறிப்பிட்ட சமுதாயங்களை அழித்தொழிக்க வேண்டும் என்கிற இனவெறி கோட்பாட்டை முன்வைக்கும் விசிக கட்சியை கொண்டே, இனவெறி குறித்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துவது கொடூரமான நகைமுரண் இல்லயா?
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் செய்ய கைவசம் ஒரு பிரச்சனையும் இல்லை என்று, அவர்களாகவே பிரச்சனைகளை உருவாக்கி கொண்டு, அதற்கு தீர்வு கொடுப்பது போல செயல்பட்டு கொண்டிருப்பது இன்றைய நவீன கால அரசியலில் நகைப்பை ஏற்ப்படுத்துகிறது.






