நடிகர் விஷால் யாரை திருமணம் செய்யவிருக்கிறார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால் படங்களில் நடிப்பதை தாண்டி நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பதவிகளில் இருக்கிறார். மேலும் பிரபல தொலைக்காட்சியில் நாமொருவர் என்ற நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துவருகிறார் நடிகர் விஷால்.

நடிகர் சங்க பதவிகளால் நிறைய பிரச்சனைகள் இருந்து வந்தாலும் அதை எதிர்கொண்டு வருகிறார். நடிகர் சங்க கட்டடம் கட்டி முடித்ததும் திருமணம் என்று விஷால் கூறியிருந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

நடிகர் சங்க கட்டட வேலைகளும் தீவிரமாக நடந்து வரும் நிலையில், விஷால் திருமணத்திற்கு தயாராகி விட்டார். ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷா என்பவரை தான் அவரது குடும்பம் தேர்ந்தெடுத்துள்ளார்களாம். விரைவில் இவர்களது நிச்சயதார்த்தம் ஆந்திராவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் விஷால் தமிழ் நடிகைகள் யாராவது ஒரு பெண்ணை தான் திருமணம் செய்வார் என எதிர்பார்த்துவந்த நிலையில், இந்த தகவல் ரசிகர்களிடையே ஏமாற்றம் அளித்துள்ளது.