குரங்கிற்கு தொல்லை வழங்கிய பெண்.!! 3 வருட கடுங்காவல் தண்டனை வழங்கிய நீதிமன்றம்.!!

எகிப்திய நாட்டில் உள்ள நைல் டெல்டா நகரில் இருக்கும் செல்லப்பிராணிகளை விற்பனை செய்யும் கடைக்கு கடந்த அக்டோபர் மாதத்தில் சுமார் 25 வயதுடைய பெண்மணி ஒருவர் செல்ல பிராணிகளை வாங்குவதற்காக கடைக்கு சென்றார்.

அப்போது அந்த கடையில் இருந்த குரங்கினை கண்ட அவர் குரங்குடன் விளையாடி மகிழ்ந்தார். சிறிது நேரத்தில் விளையாடி முடித்த அவர் குரங்கின் பிறப்புறுப்பை சீண்டும் வகையில்., சில காரியங்களை செய்து குரங்கிற்கு செக்ஸ் தொல்லை வழங்கினார்.

இதனை கண்ட அங்குள்ள மக்கள் ஒன்றும் கண்டு கொள்ளாதோர் போலவே இருந்த சமயத்தில்., இதனை கவனித்த அங்குள்ள நபர் இரகசியமாக அதனை அலைபேசியில் வீடியோ காட்சிகளாக பதிவு செய்து அதனை இணையதளங்களில் பதிவேற்றினார்.

இந்த வீடியோ பதிவுகளானது சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவவே., சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அந்த பெண் குறித்து விசாரணையில் ஈடுபட துவங்கினர்.

அந்த பெண்ணை கைது செய்த காவல் துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதி மன்றத்தில் சமர்ப்பித்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் அவரது குற்றம் உறுதி செய்யப்பட்டதன் காரணமாக அவருக்கு 3 வருட சிறை தண்டனையை அறிவித்து தீர்ப்பளித்தனர்.