வட மாகாணத்தில் முதல் இடத்தைப் பெற்ற மாணவனின் வார்த்தை!

வைத்தியராகி நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம் என வட மாகாணத்தில் விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் பெற்ற வவுனியா மாணவன் அருட்செல்வம் உதிஷ்டிரன் தெரிவித்துள்ளார்.

வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் 3ஏ சித்திகளைப் பெற்று தேசிய ரீதியில் 24 ஆவது இடத்தையும், வடமாகாணத்தில் முதலாவது இடத்தையும், வவுனியா மாவட்டத்தில் முதலிடத்தையும் பெற்ற தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் அருட்செல்வன் உதிஷ்டிரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் கஸ்ரப்பட்டு படித்ததன் காரணமாக வடமாகாணத்தில் முதலிடத்தைப் பெற முடிந்தது. இதேபோல் இனியும் கஸ்ரப்பட்டு படித்து வைத்தியராக வருவேன்.

வைத்தியராக வந்து நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம்.

நான் இவ்வாறு சிறந்த பரீட்சைப் பெறுபேற்றைப் பெற எனக்கு வழிகாட்டிய எனது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் எனது பெற்றோருக்கு இந்த இடத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

இன்னும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் எனது மேற்படிப்பை தொடரவுள்ளேன் எனத் தெரிவித்தார்.