நுரையீரல் புற்றுநோயை எதிர்த்து போராடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் மனைவி ரூத், 46 வயதில் இன்று உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் கடந்த 1998ம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் ரூத் என்பவரை சந்தித்தார்.
2003ம் ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்ட ஸ்ட்ராஸ், அதன் பிறகு இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக பதிவியேற்று 2009ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரை கைப்பற்றி அணிக்கு பெருமை சேர்ந்தார்.
இந்த தம்பதியினருக்கு சாம், லூகா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நல குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரூத்திற்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரூத்திற்கு கடந்த 12 மாதங்களாக சிகிச்சை அளித்து வந்த அனைவருக்கும் நன்றி.
யாரை கேட்டாலும் கூறுவார்கள் ரூத், குடும்பத்தின் மீது எந்த அளவிற்கு காதல் வைத்திருந்தாள் என்று. தற்போது அவர்கள் இறந்துவிட்டாள் என்பதை பெரும் துயரத்துடன் அறிவிக்கிறோம்.
அவளுடைய இறுதிச்சடங்கு, உறவினர்கள் மத்தியின் அவுஸ்திரேலியாவில் அவள் பிறந்த மண்ணில் நடைபெற உள்ளது என கூறப்பட்டுள்ளது.






