இந்த, 4 ராசிக்காரர்களுக்கு காதல் திருமணம் தான் 2019ஆம் ஆண்டு!

காதல் யாரிடமும் உத்தரவு பெற்று வருவதில்லை. காற்றுப் புகாத இடத்தில் கூட காதல் புகுந்து விடும். கோடிக்கணக்கான இளம் உள்ளங்களை இந்த காதல் தினமும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. காதல் வந்தால் கல்லாதவன் கூட கவிஞனாவான்.

காதல் இருக்கும் இடத்தில் அன்பும், அரவணைப்பும் நிறைந்திருக்கும். அந்த வகையில், பிறக்க இருக்கும் ஆங்கில புத்தாண்டில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு காதல் கைக்கூடும் என்பதை பற்றி காண்போம்.

இந்த புது வருடத்தில் காதலில் வெற்றிக்கொள்ளும் ராசிகள் :

* கடகம்

* விருச்சகம்

* மகரம்

* மீனம்

கடகம் :

நிதானமான பேச்சுக்களின் மூலம் எதிர்பார்த்த ஆதரவுகளை பெற்று தன் காதலை சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுத்தி வெற்றிக்கொள்வார்கள்.

விருச்சகம் :

தெளிவான சிந்தனைகளின் மூலம் மனதில் தோன்றிய விருப்பங்கள் யாவும் நிறைவேறும்.

மகரம் :

மனதில் தோன்றிய எண்ணங்களுக்கு தகுந்த முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.

மீனம் :

குடும்ப உறுப்பினர்களிடம் சாதகமான சூழலில் தனது எண்ணங்களை வெளிப்படுத்துவதன் மூலம் மேன்மையையும், வெற்றியையும் அடையலாம்.