இலங்கையிலிருந்து திடீரென வெளிநாடுகளிற்கு பறக்கும் பலர்..

சுற்றுலா வீசாவில் வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியத்தின் பொது முகாமையாளர் கீர்த்தி முத்துக்குமாரன இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இதனால் தொழில்களிலும், வெளிநாடுகளில் இடம்பெறுகின்ற எதிர்பாராத அசம்பாவிதங்களின்போதிலும் அவர்களின் பாதுகாப்பு குறித்து பிரச்சினை ஏற்படுகின்றது.

கட்டார், டுபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கே சுற்றுலா விசாவில் அதிக எண்ணிக்கையானோர் செல்வது தெரியவந்துள்ளது. அதேவேளை சில தரகர்களின் ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கும் அதிகமானவர்கள் பயணங்களை மேற்கொள்வது கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தப் பயணங்களை மேற்கொள்வதற்காக உதவி புரிகின்ற முகவர் நிறுவனங்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.