மாணவனின் மர்ம மரணம்: வடகொரியாவுக்கு ஏற்பட்ட புதுச் சிக்கல்….

வடகொரியாவுக்கு சுற்றுலா சென்ற அமெரிக்க மாணவன் கைது செய்யப்பட்டு கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கட்ட விவகாரத்தில் இழப்பீடாக 500 மில்லியன் டொலர் வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு வடகொரியாவுக்கு சுற்றுலா சென்ற அமெரிக்க மாணவன் Otto Warmbier, உளவு பார்த்ததாக கைதாகி 15 ஆண்டுகள் கடும் தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் வடகொரிய அதிகாரிகளின் கடும் சித்திரவதையில் குறித்த இளைஞர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனிடையே 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் Otto Warmbier வடகொரியாவில் இருந்து விடுதலையானார்.

ஆனால் அவர் அமெரிக்கா திரும்பிய சில நாட்களில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், Otto Warmbier குடும்பத்தினர் வடகொரிய அரசுக்கு எதிராக வழக்குப் பதிந்துள்ளனர்.

குறித்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட வாஷிங்டன் மாவட்ட நீதிமன்றம் Warmbier குடும்பத்தினருக்கு வடகொரியா 500 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.