தமிழகத்தில் கள்ளக்காதல் மோகத்தில், கணவரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த மனைவி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தொட்டபேளூரை சேர்ந்தவர் மாதேஷ் (35). இவருக்கு, அம்பிகா (28) என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர்.
அம்பிகாவுக்கும் அதே ஊரைச் சேர்ந்த உறவினர் ராமமூர்த்தி (34) என்பவருக்கும், கடந்த இரண்டு ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இதையறிந்த மாதேஷ் மனைவியை கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த, இரண்டு மாதங்களாக, பெங்களூருவில் உள்ள ரெடிமேட் ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு அம்பிகா வேலைக்கு சென்று வந்தார்.
நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து அம்பிகா வீட்டுக்கு வந்த போது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மாதேஷ் பிணமாக கிடந்தார்.
புகார்படி, கெலமங்கலம் பொலிசார் விசாரித்தனர். அதில் கள்ளக்காதலுக்கு, இடையூறாக இருந்ததால் கணவரை கொல்லும்படி அம்பிகா ராமமூர்த்தியை வலியுறுத்தியுள்ளார்.
இதையடுத்து நண்பர் முரளி (32) உதவியுடன் மாதேஷை ராமமூர்த்தில் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, மூன்று பேரையும், பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.