பெண்ணை அடைய விதவிதமான லீலைகள்.!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் தோம்பிவிலி கிழக்கு பகுதியில் வசித்து வருபவர் 47 வயதுடைய பெண். இவருடைய கணவருடன் வசித்து வரும் இவரது அண்டை வீட்டுக்காரர் துஷார் புஜாரே (வயது 27).

துஷார் புஜாரேவிற்கு 47 வயதுடைய பெண்ணுடன் ஒருதலை காதல் (காமம்) இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவருக்கு தொடர்ந்து பலவகையான வழியில் பாலியல் தொல்லை வழங்கிவந்துள்ளார்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த பெண் அவரை பேசி திருத்தி விடலாம் என்று இருந்துள்ளார். இந்நிலையில்., அந்த வாலிபர் அப்பெண்ணின் கணவரிடம் சென்று தங்களின் மனைவியை காதலித்து வருவதாகவும்., இவர்களின் திருமணத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த அவர் அவரை கடுமையாக பேசிவிட்டு சென்றுள்ளார். மேலும்., தொடர்ந்து அந்த வாலிபர் அந்த பெண்ணின் இச்சையை தூண்டிவிடும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

அந்த நடவடிக்கையில் ஒரு பகுதியாக அந்த பெண்ணிற்கும் அதே பகுதியை சார்ந்த பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த பெண்ணின் கணவர் இது குறித்து மனைவியிடம் சென்று சந்தேகித்து சண்டையிட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பெண் தனது நண்பர்களின் உதவியுடன் அவரை அங்குள்ள ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று அவரது ஆணுறுப்பை வெட்டி எடுத்துள்ளார். இதனால் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளார்.

மேலும்., இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் அவரே சென்று தனக்கு நடந்த அநீதிகள் பற்றியும்., இதனால் அவர் செய்த செயலையும் கூறி சரணடைந்தார்.