ஹெச்ஐவி ரத்தம் தானம் செய்த இளைஞன்!! வெளியான பல பின்னணி தகவல்!!

ஹெச்ஐவி ரத்தம் தானம் செய்த இளைஞர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஒருவர் அயல்நாடு செல்வதற்காக உடல் பரிசோதனை செய்தபோது ஹெச்.ஐ.வி தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. விசாரித்த பொது இரண்டு வாரங்களுக்கு முன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அவர் ரத்த தானம் செய்துள்ளார் என்பது தெரிய வந்தது. மேலும் இந்த ரத்தம் யாருக்கு செலுத்தப்பட்டது என்ற பட்டியலை எடுத்து பார்த்த போது, சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அப்பெண்ணின் ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபோது அவர் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, கர்ப்பிணி பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட ஹெச்.ஐ.வி. தொற்று இருந்த ரத்தத்தை தானம் வழங்கிய இளைஞர் கமுதியில் நேற்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். எலி விஷத்தை தின்று தற்கொலைக்கு முயன்ற அந்த இளைஞர், ராமநாதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஹெச்ஐவி ரத்தம் தானம் செய்த இளைஞர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது, அதை தொடர்ந்து தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் கிடைத்துள்ளது.