அமெரிக்காவில் வளர்ப்பு மகனுடன் பாலியல் உறவு வைத்திருந்த தாய்க்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் 26 வயதான லாரன் மியர்ஸ். இவர் தன்னுடைய கணவருடன் சேர்ந்து, 17 வயது சிறுவனை தத்தெடுத்து வளர்க்க வந்துள்ளார்.
மகன் போல வளர்க்க வேண்டிய மகனுடன் லாரன் நெருக்கம் காட்டுவதாக, அவருடைய கணவர் விவாகரத்து மே மாதம் விவாகரத்து பெற்று பிரிந்தார்.
இந்த சம்பவம் அறிந்து சம்மந்தப்பட்ட சிறுவனிடம் பொலிஸார் விசாரணை மேற்கொள்ளும் போது, நான் பாலியல் உறவு வைத்துக்கொள்ளவில்லை என சிறுவன் மறுப்பு தெரிவித்துள்ளான்.
ஆனால், சிறுவன் 18 வயது பூர்த்தியடையாததால் அவனுக்கு விவரம் தெரியவில்லை என பொலிஸார் கூறி விசாரணையை தீவிரப்படுத்தினர்.
மே மாதம் லாரனை கைது செய்த பொலிஸார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டபோது செய்த தவற்றை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்தில் வந்தபோது, குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அவர் விடுதலையான பின்னர் சிறுவர்கள் யாருடனும் நெருங்கி பழக கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்து நீதிபதி உத்தரவிட்டார்.






