புலிகளிடம் இருந்த ஆயுதங்கள்: லண்டன் கட்விக்கில் கூட இல்லை வெட்க்கக்கேடு!

உலகையே கட்டி ஆண்ட நாடு, அணு ஆயுத வல்லமை படைத்த வல்லரசு என்று பல நாடுகளால் போற்றப்படுவது பிரித்தானியாவை தான். ஆனால் இவ்வளவு பாதுகாப்பு மற்றும் தொழில் நுற்ப்பம் நிறைந்த நாட்டில் ஒரு சின்ன ஆளில்லா விமானத்தை விழுத்த ஆள் இல்லை என்பது பெரும் கவலைக்கிடமான விடையம். கட்விக் விமான நிலைய ஓடு பாதைக்கு அருகாமையில் யாரோ ஒரு கிறுக்கன் வெறும் £75 பவுண்டுகள் பெறுமதியான ரிமோட் கன்றோல் விமானத்தை பறக்க விட. அது பயணிகள் விமானத்திற்கு ஆபத்து என்று விமான நிலையத்தையே இழுத்து மூடிவிட்டார்கள் அதிகாரிகள்.

இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் ,பறக்கும் சிட்டுக் குருவியை துப்பாக்கியால் சுட முடியுமா ? இந்த விமானத்தை சுட்டு வீழ்த்த ஸ்னைப்பர் ஆட்களை விமான நிலைய அதிகாரிகள் ஏற்பாடு செய்தது தான் மிக மிக வேடிக்கையான விடையம். ஸ்னைப்பர்(குறி சுடும்) துப்பாக்கி தாரிகள் வந்துள்ளார்கள் என்ற செய்தி வைரலாக பரவ, முடிந்தால் சுடு பார்க்கலாம் என்று அந்த கிறுக்கன் தனது விமானத்தை ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு ஒரு முறை என சுமார் 7 தடவை பறக்கவிட. 340 விமானங்களை கட்விக் அதிகாரிகள் திருப்பி அனுப்பி சுமார் 110 மில்லியன் பவுண்டுகளை நஷ்டமாக சம்பாதித்துள்ளார்கள். இவை அனைத்தும் யார் பணம் ? மக்களின் வரிப் பணம்.

ஒரு ரிமோட் கன்றோல் விமானம் பறக்கிறது என்றால். அதனை கட்டுப் படுத்த பாவிக்கப்படுவது FM அல்லது MW எனப்படும் அலைகள் தான். எனவே அந்த ஒலி அலையின் வரிசையில்(95.8) அல்லது அது என்னவாக கூட இருக்காலம். அதனை கண்டு பிடித்தால் அந்த விமானத்தை உடனே செயல் இழக்க செய்ய முடியும். இது போன்ற அதி நவீன கருவி ஒன்றை 2007ம் ஆண்டே வன்னியில் புலிகள் வைத்திருந்தார்கள். பலாலி விமான நிலையத்தில் இருந்து கிளிநொச்சியை வேவு பார்க்க சென்ற 2 விமானங்களில் ஒன்றை புலிகள் வீழ்த்தி இருந்தார்கள். அதற்கு பின்னரே அதி நவீன பீச்- கிஃராப்ட் என்னும் வேவு விமானத்தை கோட்டபாய வாங்கி இருந்தார்.

அதனை கூட வீழ்த்துவது எப்படி என்று புலிகள் ஆராய்ந்து வந்தார்கள். ஆனால் சர்வ வல்லமை படைத்த பிரித்தானியா இப்படி ஒரு மொக்கு தனமாக இதனை கையாளும் என்று எவரும் நினைக்கவில்லை. இறுதியாக இஸ்ரேலில் இருந்து புதிய கருவி ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. இது ஆளில்லா விமானங்களின் கட்டுப் பாட்டு சமிஞ்சையை அறிந்து. உடனே தானும் அதே அலைவரிசையில் சமிஞ்சையை அனுப்பி, விமானத்தை வீழ்த்தி விடும். கட் விக் ஏர்போட் மூடப்பட்டதன் காரணமாக சுமார் 112,000 ஆயிரம் பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள். இதனை எவராலும் ஈடு செய்ய முடியாது.

இது முழுக்க முழுக்க ஏர்போட் அதிகாரிகளின் கையாலாகாததை தான் காட்டுகிறது. இறுதியாக குறித்த நவீன கருவியோடு பிரித்தானிய ராணுவத்தினரே வரவேண்டிய சூழ் நிலை தோன்றியுள்ளது.