ஸ்காட்லாந்தை சேர்ந்த ஒருவர் தன்னுடைய சொந்த வீட்டை சுத்தம் செய்யும் போது, 11 வருடங்களுக்கு முன்பு சிறுமியால் எழுதப்பட்ட கடிதத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
ஸ்கட்லாந்தின் கிளாஸ்கோ நகரத்தை சேர்ந்தவர் மார்ட்டின் ஜான்ஸ்டோன். இவருடைய சொந்த வீட்டிற்கு புதிதாக ஒரு குடும்பம் வாடகைக்கு வர இருந்ததால், சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
தன்னுடைய மகன் தங்கியிருந்த அறையினை சுத்தம் செய்யும்போது ஒரு கடிதத்தை கண்டறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
காரணம் என்னவென்றால் அந்த கடிதம் 2007ம் ஆண்டு வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த சிறுமியால் எழுதப்பட்டிருந்தது.
அந்த கடிதத்தில், என் பெயர் சார்லோட் ஒலிவியா ஜேன் கார்ட்னர். நான் 11 ஆண்டுகளாக இந்த வீட்டில் வாழ்ந்திருக்கிறேன், இது என் படுக்கையறை.
நான் இரண்டு வயதில் இங்கு வந்தேன், இப்போது 13 வயதாகிவிட்டது.
எனக்கு 11 வயதில் ஒரு சகோதரி உண்டு, அவள் வாழ்க்கை முழுவதையும் இங்கு தான் வாழ்ந்தாள்.
நான் இன்னும் இரண்டு நாட்களில் வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு வெளியே செல்லப்போகிறேன். நான் மிகவும் வருத்தமாக மற்றும் சோகமாக இருக்கிறேன்.
‘எனக்கு பிறகு வீட்டை நன்கு பார்த்து கொள்ளுங்கள் என எழுதியிருந்தார்.
மேலும் கடிதத்தின் கீழே, அவர்களுக்கு ‘இனிய காதலர் தினம்’ வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த கடிதத்தை கைப்பற்றிய வீட்டின் உரிமையாளர் மார்ட்டின், இப்போது பாத், சோமர்செட்டில் வசித்து வரும் சார்லோட்டை தொடர்புகொண்டு, நான் உறைவிட படுக்கையறையில், கம்பளத்தை அப்புறப்படுத்தும்போது இந்த கடிதத்தை கைப்பற்றினேன்.
நாங்கள் 2007 ல் இங்கு குடியேறினோம். இது என் மகன் டேவின் அறையாக இருந்தது. ஆனால் அவர் உளவியல் ஆய்வுக்காக பல்கலைக் கழகத்திற்கு சென்றதால், அது ஒரு உதிரி அறையாகியது என கூறினார்.
இதனை கேட்டு உடனைடியா பதிலளித்த சார்லோட், உங்களுடைய பதிவு எனக்கு பெரும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது என கூறியதோடு, மார்டினுக்கு தன்னுடைய நன்றியினையும் தெரிவித்துள்ளார்.