சென்னை மெரினா கடற்கரை அருகே 14 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியை, பக்கத்து வீட்டை சேர்ந்த 15 வயது சிறுமி விளையாடுவதற்காக மெரினா கடற்கரைக்கு அழைத்து சென்றுள்ளார்.
காலையில் சென்று இரவு நேரத்தில் தான் வீடு திரும்பியுள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அழைத்து சென்றதற்காக சிறுமியின் தாய், பக்கத்து வீட்டு சிறுமியை அதட்டியுள்ளார்.
பின்னர் மகளின் ஆடையில் ரத்தக்கறை படிந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய், நடந்தவை குறித்து விசாரிக்கும் போது, சொல்லத் தெரியாமல் அழுதுகொண்டே சிறுமி கூறியுள்ளார்.
இதனையடுத்து தாய் கொடுத்த புகாரின் பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், குதிரை ஓட்டும் தொழில் செய்து வரும் இளைஞர், அப்பகுதியில் உள்ள வீட்டில் வைத்து சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்திருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது குற்றவாளியை பொலிஸார் தேடி வருகின்றனர்.