தமன்னாவின் பிறந்த நாளை முன்னிட்டு, உதயநிதி ஸ்டாலின் கொடுத்த கிப்ட்!!

இன்று நடிகை தமன்னாவின் 29 ஆவது பிறந்த நாளாகும். இவரது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் என பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், தமன்னாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த “கண்ணே கலைமானே” படத்தின் போஸ்டரை உதயநிதி வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் தமன்னா நடித்துள்ள SyeRaaNarasimhaReddy படத்தின் போஸ்டரும் இன்று வெளியாகி உள்ளது.

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்துள்ள படம் “கண்ணே கலைமானே”. உதயநிதி ஸ்டாலினின் மாறுபட்ட நடிப்பில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற 24 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் தமன்னாவின் பிறந்த முன்னிட்டு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.