ஷப்ரா நிதி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டவர்களில் சயந்தன் குடும்பமும் ஒன்று?

தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் ஆகியோருக்கிடையிலான முறுகலை பற்றி நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

தென்மராட்சியில் ஈ.சரவணபவன் கால்பதிப்பது சயந்தனிற்கு பொறுக்க முடியாமல் இருக்கிறது என சரவணபவன் தரப்பு குறிப்பிட்டு வந்தது. இதனாலேயே, சரவணபவனிற்கு ஆதரவான சாவகச்சேரி நகரசபை மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், கே.சயந்தனால் மிரட்டப்படுகிறார்கள் என்றும் சரவணபவன் தரப்பில் குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில், நேற்றிரவு கே.சயந்தனின் ஆதரவாளர்களால் வேறுவிதமான தகவல் ஒன்று தமிழ்பக்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விபரம் வருமாறு-

“சரவணபவன்- சயந்தன் மோதல் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல. சரவணபவன் முகாமைத்துவத்தில் அங்கம் வகித்த ஷப்றா நிதி நிறுவனத்தினால் ஏமாற்றப்பட்ட குடும்பங்களில் சயந்தனின் குடும்பமும் ஒன்று.

சயந்தனின் பாட்டி தனது இறுதிக்காலத்தில் தனது பராமரிபபுச் செலவுகளுக்காக ஒருதொகைப் பணத்தை ஷப்றா நிதிநிறுவனத்தில் வைப்பிலிட்டுள்ளார். ஆனால் சிலவருடங்களிலேயே பலநூற்றுக்கணக்கான பொதுமக்களின் வைப்புப் பணத்தை முகாமைத்துவமும், பங்களரும் கபளீகரம் செய்து விட்டார்கள். இதனால் தற்கொலை செய்து கொண்ட குடும்பங்கள் பல. தமது பெண்பிள்ளைகளின் திருமணத்திற்காக சீதனம் கொடுக்க பெற்றோரினால் சேமித்த பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டதால் திருமணமாகாமலே ஏராளம் யாழ்ப்பாணத் தமிழ் பெண்கள் இன்றும் முதிர்கன்னிகளாக உள்ளனர்.

சயந்தனது பாட்டி இறுதிவரை போராடியும் முகாமைத்துவம் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவேயில்லை. தனது மரணச்செலவுக்காவது அந்தப்பணத்தை தனது பேரனான சயந்தனிடம் ஒப்படைக்குமாறு கடிதம் எழுதிவிட்டு சயந்தனது பாட்டி இறந்துள்ளார். சயந்தன் தனது ஆதரவாளர் மத்தியில் இந்த விபரங்களை தெரிவிக்க அதனை யாரோ ஒருவர் சரவணபவனிடம் போட்டுக் கொடுக்க ஆரம்பமானதுதான் சரவணபவன்- சயந்தன் முறுகல்.

அண்மையில் அராலிப்பகுதியில் குள்ளமனிதன் வருகிறான் என்று மக்களை பீதிக்குள்ளாக்கி அதில் அரசியல் இலாபம் தேட முனைந்த சரவணபவனின் பக்கா பிளானுக்கும் ஆப்படித்தவர் இந்த சயந்தன்தான் என்பது குறிப்பிடத்தக்கது“ என அந்த தகவல் குறிப்பிடுகிறது.