சர்க்கரை நோய் ஏற்பட காரணம் என்ன?

மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருக்கும் நோய்கள் என்று ஒரு பட்டியலைப் போட்டால் அதில் முதலிடத்தில் இருப்பது சர்க்கரை நோய். இந்த நோயானது சிறியவர் முதல் முதியவர் வரை அனைவரையும் பாதித்து வருகிறது.

சர்க்கரை நோய் ஏற்பட்டு விட்டால் உடலின் உறுப்புகள் அனைத்துமே கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பு ஏற்படும். இரத்த நாளங்கள் ‌விரைவில் சிதைந்துவிடைந்து விடுகின்றன.

சர்க்கரை நோயினால் பல விளைவுகள் ஏற்படுகின்றன. சர்க்கரை நோய் இருக்கும் ஆண்களுக்கு விரைப்புத் தன்மை இல்லாமை, விந்தணுக்களில் குறைபாடு ஏற்படுதல், விந்து முந்துதல், செக்ஸ் உணர்ச்சி குறைந்துவிடுதல் ஆகியவை ஏற்படுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

பெண்ணாக இருந்தால் பிறப்புறுப்பில் நோய்த் தொற்று, ஹார்மோன்களில் குறைபாடுகள் அல்லது மாறுபாடுகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

முந்தய காலங்களில் சர்க்கரை என்பது முதியவர்களுக்கு மட்டுமே இருந்து வந்தது. ஆனால் தற்போது நடு‌த்தர வயதைத் தொட்ட பல ஆண், பெண்களுக்கு சர்க்கரை நோய் வருவது பரவலாக அதிகரித்து வருகிறது.

சர்க்கரை நோய்க்கு பெண்களைவிட ஆண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளாதவர்களில் 50 சதவீதமானோர் அடுத்த ஐந்தாண்டுகளில் ஆண்மைக் குறைவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்று சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர்.

தற்போதைய வாழ்கை முறையில் ஆண்கள் அதிகப்படியானோர் புகை, போதை மற்றும் மது போன்ற பழக்கங்களில் ஈடுபடுதல், கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழ்தல், அதிகமாக மன இறுக்கம், வேலைச்சுமை , அதிக சொகுசாக வாழ்தல் போன்ற பல காரணிகளுடன் அதிக தொடர்பு கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் ஆண்களுக்கு சர்க்கரை வியாதியால் அதிக பாதிப்புகள் உண்டாகின்றன.