மட்டக்களப்பு பொலிஸாரின் தலையீட்டினால் ஐந்து பிள்ளைகள் உட்பட அஜந்தனின் குடும்பத்தாரும் பாதுகாப்புடன் அவர்களது வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பாக அஜந்தனின் மணைவி இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
எனது கணவர் எந்த குற்றமும் செய்யாதவர். நடைபெற்ற சம்பவத்திற்கும் அவருக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. அவரது விடுதலை குறித்து நாம் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தோம். எனினும் பொலிஸாரின் தலையீட்டினால் இப்போராட்டமானது இடையில் கைவிடப்பட்டது.
மேலும் இப்போராட்டமானது 90 நாட்கள் சென்றாலும், அதன் பின்னர் உள்ள 91ஆம் நாளும் தொடரும் என இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என அவர் தெரிவித்திருந்தார்.