ஒபிஸ்-க்கே ஆப்பு வைத்த பலே கில்லாடி.!

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் நண்பன் என்று கூறியும், அரசு வேலை வாங்கி தருவதாக கூறியும் 1 கோடி ரூபாய் மோசடி செய்த கில்லாடி வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று நீலாங்கரை காவல் நிலையத்தில் சென்னை அடுத்த நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரை சேர்ந்த சீனிவாசலு (வயது 24) ஒரு புகார் ஒன்று அளித்தார். அதில், ”நீலாங்கரை சன்ரைஸ் அவன்யூவில் பகுதியை சேர்ந்த சரவணகுமார் என்பவர், தனக்கு தேசிய நெடுஞ்சாலையில் உதவி பொறியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் வாங்கினார். ஆனால், வேலையும் வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. அவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து, பணத்தை திருப்பி பெற்று தர வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

புகாரை பெற்றுக்கொன்ற நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, மோசடி செய்த சரவணகுமார் வீட்டுக்கு விரைந்து சரவணகுமாரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து, அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

போலீசார் விசாரணையில், சரவணகுமார் தன்னை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகனின் நண்பன் என்று கூறி மருத்துவர் சீட் வாங்கி தருவதாக ரூ.60 லட்சம் வரையிலும் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி என ரூ.1 கோடிக்கும் மேல் மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, போலீசார் சரவணகுமாரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

துணை முதலமைச்சர் பேருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் வாலிபர் ஒருவர் மோசடி செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.