கோயம்பேடு பேருந்துநிலையம் அருகே நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய்காந்துக்கு சொந்தமான ஆண்டாள்-அழகர் திருமண மண்டபம் உள்ளது.
எந்த நேரத்திலும், கோயம்பேட்டில் டிராபிக் ஜாம் ஏற்பட்டு கொண்டே இருந்தது. அதனால் அப்பகுதியில் நெரிசலை தவிர்க்க ஒரு அடுக்கு மாடி மேம்பாலம் கட்டுவதற்கு அப்போதைய திமுக அரசு முடிவு செய்தது. ஆனால் இதற்கு விஜயகாந்த்தின் திருமண மண்டபம் கொஞ்சம் இடைஞ்சலாக இருக்கவே மண்டபத்தின் ஒரு பகுதி இடிக்க வேண்டி வந்தது.
அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியை சந்தித்து மண்டபத்தை இடிக்க வேண்டாம் என கூறி, அதற்கு மாற்று வழியையும் சொன்னார். ஆனால் விஜயகாந்த்தின் கோரிக்கையை கொஞ்சம் கூட பொருட் படுத்தாமல் மண்டபத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது.
தற்போது உடல்நிலை கோளாறு காரணமாக அடிக்கடி வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
விஜயகாந்திற்கு உடல் நலக் குறைவு ஏற்படுவதற்கு முக்கிய காரணம், அவருக்கு அவருடைய கட்சியை பற்றியும் தொண்டர்களை பற்றியும் மற்றும் கட்சி அலுவலகத்தை பற்றியும் தான் இருக்கும் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இந்த பகையை மனதில் வைத்தே, கேப்டன் விஜயகாந்த் தி.மு.க.வை எதிர்த்து பிரச்சாரம் செய்ததுடன், அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து, திமுக சரித்திரத்தில் மறக்க முடியாத தோல்வியை விஜயகாந்த் ஏற்படுத்தினார். இந்த பகையை மனதில் வைத்தே, கடைசியாக நடந்த தேர்தலில் கூட அவர் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது, கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் நிர்வாக பணி நடந்து வருகிறது. அதற்காக கோயம்பேட்டிலிருந்து மெட்ரோ ரயில் பாதைகளை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. விரிவாக்கம் செய்ய இருப்பதால், அங்கு இடையூறாக உள்ள கடைகள், வீடுகள் நிலங்கள் என அனைத்தையும் கையகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அவ்வாறு கையகப்படுத்தும் நிலங்களில் ஒட்டுமொத்தமாக காணாமல் போவது விஜயகாந்தின் மண்டபம் தான். மேலும், விஜயகாந்தின் மண்டபம் இருக்கும் அதே இடத்தில் தான் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.






