கோலியை சீண்டிய ஆஸ்திரேலிய கேப்டன்!

ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்க்ஸை விளையாட தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 326 ரன்கள் எடுத்தது.

பின்னர், முதல் இன்னிங்க்ஸை ஆடிய இந்திய அணி 283 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் இருந்து நாதன் லியான் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 243 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் அந்த அணி 286 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையடுத்து, இந்திய அணி 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட தொடங்கியது. இதில், ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதமாக முதல் ஓவரிலேயே ஸ்டார்க் பந்தில் கே.எல்.ராகுல் போல்டனார். பின்னர், ஹஸுல்வுட் பந்துவீச்சில் புஜாரா கீப்பரிடம் கேட்ச் அவுட்டானார். இதனைத்தொடர்ந்து, விராட் கோலி 17 ரன்களில் லியானின் சுழல் பந்தில் வெளியேறி அதிர்ச்சி கொடுக்க, மீண்டும் அவருடைய பந்திலேயே முரளி விஜய் (23 ரன்களில்) போல்டனார். அப்போது, இந்திய அணி 48 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மேலும் தடுமாறினர்.

அடுத்து வந்த ஹனுமா – விஹாரி இணை நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். ஆனாலும் ரஹானே 30 ரன்களில் ஹஸுல்வுட் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார். பின்னர், நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் 112 ரன்களுக்கு இழந்திருந்தது. இந்திய அணியில் விஹாரி 24 ரன்களுடன், 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணியில் ஹஸுல்வுட், லியான் ஆகியோர் 2 விக்கெட்டுகளும், ஸ்டார்ச் 1 விக்கெட்டும் எடுத்தார்.

முன்னதாகவே, மூன்றாவது நாள் ஆட்டம் முடிந்த பின், இந்திய கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயினும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டபடியே சென்றனர்.

அப்போது, பெயின் கோலியிடம், ‘நீ தான் நேத்து தோத்தேல்ல…சும்மா இன்று கூலா இருக்கிற மாதிரி நடிக்காத..’ என்றார்.

இதைக்கேட்ட கோலி ஆக்ரோஷமாக பெயின் நெஞ்சில் மோதுவது போல சென்றார். இதை கவனித்த, அம்பயர் காப்னே, போதும் போட்டியை தொடருங்கள். நீங்கள் இருவரும் கேப்டன்கள் என்று கூறினார். பின்னர், கேப்டன் பெயின், நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். சண்டை எதுவும் இல்லை. கூலாக இரு கோலி என்றார்.

  • இதற்கு மீண்டும் பதிலளித்த கோலி, கூறியது அது மைக்ரோபோனில் பதிவாகவில்லை. இதைத்தொடர்ந்து, அம்பயர் வார்னிங் கொடுத்ததையடுத்து இருவரும் அமைதியாகி மைதானத்தைவிட்டு வெளியே சென்றனர்.