உயர் நீதிமன்றம் சற்று முன்னர் விசேட அறிவிப்பு….!!

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை மீதான இடைக்கால தடை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை மீதான இடைக்கால தடையை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தாக்கல் செய்த மனு மீதான வாதப்பிரதி வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலேயே உயர் நீதிமன்றம் சற்று முன்னர் இவ்வாறு அறிவித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக மஹிந்த தலைமையிலான குழுவினர் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 16ம், 17ம், 18ம் திகதிகளில் மீண்டும் விசாரிக்கப்படும் என மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழுவினர் சற்று முன்னர் அறிவித்துள்ளனர்