பிரித்தானிய இளவரசி கேட், தனியாக பக்கிங்காம் அரண்மனைக்கு கார் ஓட்டியபடியே செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய இளவரசி கேட், அரச வேலைகள் காரணமாக கடந்த சில மதங்களாவே மிகவும் பிசியாக இருந்து வருகிறார். கடந்த வாரம் கூட Cyprusக்கு வருகை தந்திருந்தார்.
இந்த நிலையில் ராணியின் அழைப்பை ஏற்று கேட், தன்னுடைய அட்டவணையில் சில திருத்தங்களை செய்துகொண்டு பக்கிங்காம் அரண்மனைக்கு சென்றுள்ளார்.
வெளியில் நின்று கொண்டிருந்தவர்களில் ஒருவர் வீடியோ எடுத்தபோது, அதில் கேட் தனியாக கார் ஒட்டி வருவது பதிவாகியிருந்தது.
இந்த வீடியோ காட்சியானது இணையம் முழுவதும் வைரலாக பரவ ஆரம்பித்தது. இந்த வீடியோவிற்கு கீழ் ஒருவர், ‘கேட் மிடில்டன் அரண்மனைக்கு வரும் போது உங்களுடைய வீடியோவில் அவர் சிக்கியிருப்பதால், நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி” என பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோவினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒருவர், கேட் எதற்காக பக்கிங்காம் அரண்மனைக்கு வந்தார் என்பது ஆச்சர்யமாக உள்ளது. ஒருவேளை ராணியுடன் தேநீர் அருந்த வந்திருப்பாரோ? என பதிவிட்டிருந்தார்.
இந்த சந்திப்பானது, இளவரசிகளுக்குள் நடைபெற்று வரும் பிரச்சனைகள் பற்றி பேசுவதற்காக இருக்கலாம் என அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏனென்றால், கேட் வருவதற்கு முன்பாக மேகன் ராணியை சந்தித்து விட்டு சென்றார். அங்கு, மேகனுக்கு ராணி சில அறிவுரைகள் வழங்கியதாக தெரிகிறது.
தற்போது இருவருடனும் சந்திப்பை நிகழ்த்தியிருந்தாலும், ராணியின் முழு ஆதரவும் மெர்க்கல் பக்கம் இருப்பதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்றைய சந்திப்பின் போது கூட கேட்டிற்கு ராணி அறிவுரைகள் வழங்கியதாக கூறப்படுகிறது.






