மனைவிக்கு அனுப்பிய ஒரு வார்த்தையால் சிறைக்கு சென்ற மாப்பிள்ளை..!!

சவுதி நாட்டில் வருங்கால மனைவிக்கு அனுப்பிய ஒரு வார்த்தையால் நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ஒருவர் தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணிடம் வாட்ஸ் அப்பில் உரையாடிக்கொண்டிருக்கையில், அரபு மொழியில் ஹப்லா என்று கூறியுள்ளார். அப்படி என்றால் ஆங்கிலத்தில் முட்டாள் என பொருள் தரும் இடியட் என்றாகிறது.

அந்த நபர் விளையாட்டாக கூறியதை, அப்பெண் தன்னை இழிவுபடுத்திவிட்டதாக எடுத்துக்கொண்டார். இதனால், தனது வீட்டாரிடம் தெரிவித்து மாப்பிள்ளை மீது பொலிசில் புகார் அளித்து அவர் மீது வழக்கு தொடர்ந்தார்.

கடுமையான வார்த்தைகளால் திட்டும் அதிகாரம் இன்னொருவருக்கு இல்லை என்பதனால், அந்த நபர் மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர்.

இதனால் அந்த நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டும், 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டும் தீர்ப்பளிக்கப்பட்டார்