அன்று ராணியாக வாழ்ந்தவர்.. இன்று பட்டினியால் அழுகிய நிலையில் இறந்து கிடந்த பரிதாபம்

ஒரு காலத்தில் புகழ்பெற்ற குடும்பத்தில் ராணியாக வாழ்ந்த பெண் உணவின்றி பட்டியால் இறந்துபோன சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார் சலீல் சவுத்ரி. இவர் தனது 75 வயது தாய் லீலாவதியுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், லீவாதியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அக்கம்பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, லீலாவதியின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

மகன் சவுத்ரி, அடிக்கடி தனது தாயிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்றுவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இம்மாதமும் கோபித்துக்கொண்டு சென்றவர், 2 மாதமாக வரவில்லை.

இதனால் பட்டினியால் லீலாவதி இறந்துள்ளார் என தெரியவந்துள்ளது. விசாரணையில் கிடைத்த இன்னொரு தகவல், லீலாவதியின் கணவர் உபி முன்னாள் எம்எல்சி (மேலவை உறுப்பினர்) ராம்கேர் சிங் என்று தெரியவந்துள்ளது.

ஒரு காலத்தில் லக்னோவில் புகழ்பெற்றம் குடும்பம் இவர்களுடையது. ராணி போன்று வாழ்க்கை வாழ்ந்து வந்த லீலாவதி இப்படி, பட்டினியால் இறந்துகிடந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.