தமிழகத்தில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் பி.எச்.டி ஆய்வு மாணவி, தன்னை துறைத்தலைவர் படுக்கைக்கு அழைத்தார் என்ற பகீர் குற்றச்சாட்டை கூறி பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் மனு அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் பி.எச்.டி ஆய்வு மாணவியான அவர், கடந்த ஓராண்டு காலமாக குறித்த பேராசிரியர் தமக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் மின்னனு ஆய்வு மைய பொறுப்பாளராக செயல்பட்டு வருபவர் கருணமகாராஜன் என்பவர்.
இவரே தமிழக ஆளுநர், நிர்மலாதேவி தொடர்பான கண்காணிப்பு கமெரா மற்றும் வீடியோ ஆதாரங்களை முற்றிலும் அழித்ததற்கு முழுகாரணம் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்.
இவர் மீதே தற்போது மாணவி ஒருவரால் பாலியல் புகார் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக புகார் தெரிவித்துள்ள கேரள மாணவி,
கருணமகாராஜன் எல்லா மாணவிகளிடமும் கையை பிடித்து தனக்கு கைரேகை பார்க்கதெரியும் என்று கையை பிடிப்பார்.
பின்பு அவர்களை அவர் இழுத்த இழுப்பிற்கெல்லாம் வரவேண்டும் என்று கட்டாயப்படுத்துவார். அப்படித்தான் என்னையும் பலமுறை முன்னாள் துணைவேந்தர் செல்லத்துரையை தனிமையில் பார்க்கவேண்டும் என்று வற்புறுத்தினார்.
இங்கு இருக்கும் என்னை போன்ற மாணவிகளுக்கும் இதே நிலைமைதான். அப்போதுதான் பி.எச்.டி வாங்கமுடியும் என்ற நிலை உள்ளது என்றார்.
பெண்கள் அந்த விசயத்திற்கு அட்ஜஸ்ட் பண்ணாதான் உயர்படிப்பு படிக்கமுடியும் என்ற நிலை எனக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்ததால்,
ஒரு வாரம் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். பொறுத்து பொறுத்து பார்த்த பிறகுதான் புகாருக்கே போனேன் என்றும் அந்த மாணவி தெரிவித்துள்ளார்.
மாணவிகளை தவறானபாதைக்கு அழைத்ததாக நிர்மலாதேவி மற்றும் முருகன் கருப்பச்சாமி ஆகியோர் கைதுசெய்யபட்டு சிறையில் இருக்கும் நிலையில்,
திரைப்படம் மற்றும் மின்னனு ஆய்வு மைய பொறுப்பாளர் கருணமகாராஜன் மீதான பாலியல் புகார் மீண்டும் மதுரை பல்கலைக்கழகத்தை பரபரப்புக்கு கொண்டு வந்துள்ளது.






