பரபரப்பான சூழ்நிலையில் மஹிந்தவின் அதிரடி!

அரசியலை விட்டு ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மக்களின் பலம் தனக்கு இருக்கும் வரையில் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பன்னிப்பிட்டியவில் நடைபெற்ற மத நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர்களுக்கு மஹிந்த கருத்து வெளியிட்டார்.

தற்போதைய அரசியல் மிகவும் குழப்பமான நிலையில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதே மக்களின் எண்ணமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலில் பதவிகள் இருக்கும், இல்லாமல் போகும். பதவிக்காக அரசியல் செய்யவில்லை. பதவி இல்லை என்றாலும் அரசியல் செய்வோம்.

பொது மக்கள் என்னுடன் இருக்கும் வரை நான் அரசியலில் தொடர்ந்து இருப்பேன் என மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவை அடிப்படையாக வைத்து அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் மஹிந்த கருத்து தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.

சர்ச்சைக்குரிய பிரதமராக செயற்பட்ட மஹிந்தவின் அதிகாரங்களை மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவின் மூலம் நிறுத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.